சாலையில் கிடந்த நகைப்பெட்டி: போலீஸில் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியர்

சாலையில் கிடந்த நகைப்பெட்டி: போலீஸில் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியர்

வத்தலக்குண்டுவில் சாலையில் கிடந்த நகைப்பெட்டியை போலீஸில் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியரை திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் பாராட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். டாஸ்மாக் ஊழியரான இவர் பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது சாலை நடுவே கிடந்த பையை எடுத்தார். அதில் நகைப்பெட்டி இருப்பதை பார்த்தார். அந்த நகைப்பெட்டியை வத்தலக்குண்டு போலீஸில் கார்த்திக் ஒப்படைத்தார்.

அதில் 12 பவுன் நகை இருந்தது. பையில் இருந்த நகைக்கடை ரசீது மூலம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த நகையை வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்பவர் வாங்கியது தெரிய வந்தது.

இதன்பின்னர், அந்நகையை கவுதமிடம் திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் ஒப்படைத்தார். கீழே கிடந்த நகையைத் தனதாக்கிக் கொள்ளாமல் போலீஸில் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியர் கார்த்திக்கை எஸ்பி பாஸ்கரன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in