எந்த பெண்ணும் தொடாத நகை வேண்டும்: கடைக்காரருக்கு போக்குக்காட்டி 10 லட்சம் நகைக்கொள்ளை

எந்த பெண்ணும் தொடாத நகை வேண்டும்: கடைக்காரருக்கு போக்குக்காட்டி 10 லட்சம் நகைக்கொள்ளை

இதுவரை எந்தப்பெண்ணும் தொடாத நகையை ஜெயின் துறவிக்கு வாங்க வந்துள்ளோம் என்று கூறி 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற இருவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பர்ரா பகுதியில் அம்பிகா பிரசாத் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இருவர் இன்று நகை வாங்க வந்தனர். ஜெயின் மதத்தைச் சேர்ந்த துறவிக்கு காணிக்கை செய்வதற்காக இதுவரை எந்த பெண்ணும் தொடாத நகையை வாங்க வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இதன் பின் தங்க நெக்லஸ், செயின், மோதிரங்களை அவர்கள் பார்த்துள்ளனர். இந்த நிலையில், இருவரில் ஒருவர், 3 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து ஒரு வெள்ளி நாணயத்தை வாங்கியுள்ளார். இதன் பின் கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரில் அவர்கள் ஏறிச் சென்று விட்டனர்.

அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகமாக இருந்ததால் அம்பிகா பிரசாத், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தார். அப்போது வந்த இருவரும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது

இதனால் அதிர்ச்சியடைந்த அம்பிகா பிரசாத், உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அத்துடன் சிசிடிவியில் இரண்டு கொள்ளைர்களின் முகங்களும் தெளிவாக பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கான்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in