மார்ச் 31-ம் தேதிக்கு மேல் ஹால்மார்க் இல்லாத நகையை விற்க முடியாது: மத்திய அரசு உத்தரவு

ஹால்மார்க் முத்திரை அவசியம்
ஹால்மார்க் முத்திரை அவசியம்மார்ச் 31-ம் தேதிக்கு மேல் ஹால்மார்க் இல்லாத நகையை விற்க முடியாது: மத்திய அரசு உத்தரவு

ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், அதன் மீதான மோகம் மக்களுக்குக் குறையவில்லை. இந்த நிலையில், தங்கநகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்க ஆபரணங்கள் மீது தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒன்று பொறிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹால்மார்க் முத்திரை அளித்த மையம் மற்றும் நகையை உருவாக்கிய நிறுவனம் எது என்பதை அதன் மூலம் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளன. சிறிய நகை நிறுவனங்கள் தயாரிப்புகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெற அதன் கட்டணத்தில் எண்பது சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 90 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனுடைய நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே நாடு முழுவதும் உள்ள கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என இந்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படுவதன் மூலம் தங்க நகைகளை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும். இதன் மூலம் தங்கத்தின் தரத்தில் நாடு முழுவதும் ஒரே அளவில் நிர்ணயிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in