தோசைக்கரண்டியால் பீரோ உடைப்பு… பக்கத்து வீட்டு பெண்ணிடம் நகைபறிப்பு: மதுரையைக் கலங்கடிக்கும் இரவுக் கொள்ளையர்கள்!

தோசைக்கரண்டியால் பீரோ உடைப்பு… பக்கத்து வீட்டு பெண்ணிடம் நகைபறிப்பு: மதுரையைக் கலங்கடிக்கும் இரவுக் கொள்ளையர்கள்!

மதுரையில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து ஆற அமர அமர்ந்து சாப்பிட்டு விட்டு தோசைக்கரண்டியால் பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், பக்கத்து வீட்டுப் பெண்ணிடமும் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அருகே உள்ள கூடக்கோவிலில் பகுதியில் உள்ளது ஒத்தவீடு. இப்பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சசிக்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் மாடியில் படுத்து உறங்கினார்.

நள்ளிரவில் சசிக்குமார் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பழங்களை எடுத்துத் தின்றுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த உணவை ஆற அமர அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதன் பின் தோசைக்கரண்டியால் பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாயை கொள்ளைடித்தனர்.
அத்துடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் விவசாயி மாயகிருஷ்ணன் வீட்டிற்குள் புகுந்தனர். அவரது மகள் இருளாயி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்தனர். சட்டென விழித்துக் கொண்ட இருளாயி சத்தம் போட்டார். ஆனால், நகையுடன் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து சசிக்குமார், மாயகிருஷ்ணன் ஆகியோர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். தப்பியோடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in