நட்பாக பழகிய வீட்டில் நகைகள் திருட்டு: திடீர் சிநேகிதி வசமாக சிக்கினார்

திருட்டு
திருட்டுநட்பாக பழகிய வீட்டில் நகைகள் திருட்டு: திடீர் சிநேகிதி வசமாக சிக்கினார்

கடையில் பொருட்கள் வாங்க வந்தபோது பழகிய தோழியை நகை திருட்டு வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் பாலசுப்ரமணியம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஓம் சக்தி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு தேவையான மொத்த சாமான்கள் வாங்க பாலமுருகன் செல்லும் நேரத்தில், இவரது மனைவி மகாலட்சுமி வியாபாரம் செய்து வந்தார். இந்நேரத்தில் சாமான்கள் வாங்க வரும் ராஜேஸ்வரி, பாலமுருகன் வீட்டில் ஆட்கள் இல்லாததை கடந்த 3 வாரங்களாக நோட்டமிட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி திருமண வீட்டிற்கு செல்வதற்காக, மகாலட்சுமி வீட்டில் உள்ள பீரோவை திறந்த போது நகைகள் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து போலீஸில் மகாலட்சுமி புகாரளித்தார். இதன்பேரில் கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த காளிதாஸ் மனைவி ராஜேஸ்வரி , மகாலட்சுமி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரிந்தது. இதனடிப்படையில், ராஜேஸ்வரியை (40), கேணிக்கரை போலீஸார் கைது செய்து 3 பவுன் நெக்லஸ், மூன்றரை பவுன் டாலர் செயின், அரை பவுன் தோடு என ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in