வரலாறு காணாத வகையில் எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணம் 15% உயரும் அபாயம்!

வரலாறு காணாத வகையில் எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணம் 15% உயரும் அபாயம்!

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் விமான எரிபொருளின் விலை 16% உயர்ந்துள்ளது. இதனால் விமானக்கட்டணங்கள் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

விமான எரிபொருள் (ATF) விலை இன்று 16.26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,41,232.87 என்ற அளவுக்கு விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. 2022-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இதுவரை 91 சதவீதம் விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளன.

விமான நிறுவனத்தின் இயக்கச் செலவில் 40 சதவீதம் விமான எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. 2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எரிபொருள் விலை ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒருமுறை அதிகரித்து வருகின்றன. உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப விமான எரிபொருள் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமானக் கட்டணம் 15% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாகவே விமானக் கட்டணம் தொடர்ந்து 20% மேலாக அதிகரித்துள்ள நிலையில், மேலும் கட்டண விலை உயர்ந்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், ஜார்க்கண்ட் அரசு விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை 20 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் மாநிலத்தில் விமான சுற்றுலா மேம்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in