‘மலேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை’ - டத்தோ சாமிவேலு மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்!

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு (86) கோலாலம்பூரில் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ஜவாஹிருல்லா, ‘மலேசிய அரசியலில் ஓரு தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் சாமிவேலு. அவரது காலம் மலேசியத் தமிழ் இலக்கியப் பூங்காவிற்கு வசந்த காலமாக விளங்கியது. தமிழ் எழுத்தாளர்களின் நலன்களுக்குக் காவலராகவும் அவர் விளங்கினார் என்றால் மிகையாகாது. ‘தமிழ் நேசன்’ எனும் நாளேட்டை நீண்டகாலம் நடத்தி, அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தார்’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இரு முறை கோலாலம்பூரில் நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் சாமிவேலு. மலேசிய நாட்டின் மிக உயரிய விருதான ‘துன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார். மலேசிய வரலாற்றில் துன் விருது பெற்ற இரண்டாவது இந்தியர் சாமிவேலு ஆவார். 2001-ல் தமிழகத் தலைநகர் சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழரின் மறைவு உலகத் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பேரிழப்பாகும்’ என ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in