ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறல்: அதிர்ச்சி வீடியோ!

ஹோலி பெயரில் ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறல்
ஹோலி பெயரில் ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறல்

ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் ஜப்பானிலிருந்து சுற்றுலா நிமித்தம் டெல்லி வந்திருந்த 22 வயது பெண்ணிடம் அத்துமீறிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்களில் ஒன்று சர்வதேச அளவில் கண்டனத்தை பெற்றுள்ளது. ஜப்பானில் இருந்து சுற்றுலாவுக்காக இந்தியா வந்திருந்த 22 வயது பெண் ஒருவர் டெல்லியின் பஹர்கஞ் பகுதியில் தங்கியிருந்தார்.

ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் மீது அப்பகுதியை சேர்ந்த 3 ஆண்கள் அத்துமீறலை மேற்கொண்டனர். பலவந்தமாக வண்ணப்பொடிகள் தூவியும், சாயங்களை பீய்ச்சியடித்தும் அந்த பெண்ணிடம் அத்துமீறியவர்கள், தலையில் முட்டையை உடைத்தும் விளையாண்டுள்ளனர். அந்தப் பெண் அவர்களிடமிருந்து விடுபடும் நோக்கில், சிரித்து மழுப்பி தப்பிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் ’ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் நம் வீட்டு பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்கிறோமா? இதுதான் இந்தியர்களின் விருந்தோம்பலா?’ என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்பார்த்தது போலவே சர்வதேச அளவிலும் கண்டனங்கள் குவிந்தன. பஹர்கஞ் காவல்நிலையத்தில் இது தொடர்பாக எவரும் புகாரளிக்கவில்லை என டெல்லி போலீஸார் சமாளித்தனர்.

டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையிலெடுத்தது. ’இது அப்பட்டமான பாலியல் அத்துமீறல்’ என்று கண்டித்ததோடு, ’உடனடியாக வீடியோவில் தென்படும் ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு’ டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் விடுத்தது. இதனையடுத்து, 1 சிறுவன் உட்பட 3 இளைஞர்களை டெல்லி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஜப்பானிய பெண் இந்தியாவிலிருந்து வெளியேறி பங்களாதேஷ் நாட்டில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in