ஜன. 31 முதல் இரவு ஊரடங்கு ரத்து, பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடக பள்ளி மாணவிகள்
கர்நாடக பள்ளி மாணவிகள்hindu கோப்பு படம்

கரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, கர்நாடக மாநிலத்தில் இரவு நேர முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஜனவரி 31-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இதன் பின்னர் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வரும் 31-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்படும். வகுப்பில் சில மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். முழு பள்ளிக்கும் விடுமுறை அளிக்கக்கூடாது.

உணவகங்கள் மற்றும் மது குடிப்பகங்களில் 100% முழுமையாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்களில் 50% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். மத வழிபாட்டு தலங்களில் 50 சதவீத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாநில அரசு, பேரணி, போராட்டம், மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in