‘உங்கள் முன்னோர் பட்ட கஷ்டம் உங்களுக்கு வராது’ - காஷ்மீர் இளைஞர்களுக்கு நம்பிக்கையளித்த மோடி!

‘உங்கள் முன்னோர் பட்ட கஷ்டம் உங்களுக்கு வராது’ - காஷ்மீர் இளைஞர்களுக்கு நம்பிக்கையளித்த மோடி!

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் இன்று முதன்முறையாகக் காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, ஜம்மு அருகில் உள்ள சாம்பா மாவட்டத்தின் பள்ளி பஞ்சாயத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் கொண்டாடப்படும் நாளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றதுடன் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களையும் மோடி தொடங்கிவைத்தார். அவற்றில் முக்கியமானது பனிஹால் - காஸிகுண்ட் சுரங்கப் பாதை. எல்லா பருவநிலைகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்படும் இந்தச் சாலை ஜம்முவுக்கும் காஷ்மீருக்கும் இடையிலான முக்கியமான வழித்தடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “காஷ்மீர் இளைஞர்களே! உங்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி எல்லோரும் பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால், உங்களுக்கு அப்படியான வாழ்க்கை அமையாது. நான் உறுதியாகச் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டார். தனது வார்த்தைகள் மீது ஜம்மு மற்றும் காஷ்மீரின் இளைஞர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், கடந்த சில வருடங்களில் அரசு மேற்கொண்ட அமைதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களைச் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டங்கள் மூலம் ஜம்மு - காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் இளைஞர்களுக்கு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in