சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மின்சாரம்: ஜம்மு காஷ்மீர் பழங்குடியின கிராமத்தினர் மகிழ்ச்சி!

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மின்சாரம்: ஜம்மு காஷ்மீர் பழங்குடியின கிராமத்தினர் மகிழ்ச்சி!

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அனந்த்நாக் மாவட்டத்தின் டெதன் பழங்குடியின கிராமத்துக்கு, சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது.

அனந்த்நாக்கின் டூரு பகுதியில் உள்ள பழங்குடியின கிராமமான டெதனுக்கு, பிரதமரின் மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் சுமார் 200 பேர், இதற்கு முன்பு தங்கள் அன்றாட ஒளி தேவைகளுக்கு மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை பயன்படுத்தினார்கள்.

அனந்த்நாக் நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு மின்சாரம் கிடைத்ததை, உள்ளூர்வாசிகளின் நடனமாடி கொண்டாடி வருகின்றனர். கிராமத்தில் மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் நிறுவப்பட்டு 60 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in