ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையர் முக்கிய தகவல்!

தேர்தல் 2024
தேர்தல் 2024

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்
மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்

இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 26 சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்ட சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட 2019ம் ஆண்டு முதல் அம்மாநிலத்துக்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,892 கிராம பஞ்சாயத்துகளின் 5 ஆண்டு பதவிகாலம் கடந்த ஜனவரியில் முடிவடைந்தது.

ஜம்மு - காஷ்மீர், லடாக்
ஜம்மு - காஷ்மீர், லடாக்

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு சட்டம் பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் விசாரித்தது. அப்போது, வரும் செப்டம்பர் 30-க்குள் ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதியுடன் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கும் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிவிப்பில் ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ராஜீவ் குமார், “ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்தப்பட வேண்டும் என கூறின.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

ஆனால் முழு நிர்வாக இயந்திரமும் (தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்) அதை ஒரே நேரத்தில் செய்ய முடியாது என கூறியது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10-12 வேட்பாளர்கள் இருப்பார்கள். அதாவது 1,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாதுகாப்பு படை வழங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் நிலையில் அது சாத்தியமில்லை. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் தேர்தலை நடத்துவதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தத் தேர்தல்கள் (ஏப்ரல் 19 – ஜூன் 1) முடிந்தவுடன், நாங்கள் அங்கு தேர்தலை நடத்துவோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!

குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!

பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in