டெல்லி ஜமா மசூதிக்குள் பெண்கள் தனியாக செல்வதற்கு தடை

டெல்லி ஜமா மசூதிக்குள் பெண்கள் தனியாக செல்வதற்கு தடை

டெல்லி ஜமா மசூதிக்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஜமா மஸ்ஜித் மசூதி வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ நுழைவதற்கு நிர்வாகக் குழு தடை செய்தது. ஜமா மஸ்ஜித் வளாகத்தில் பெண்கள் நுழைவதற்கு, அவர்களது குடும்பத்தில் ஒரு ஆண் உடன் செல்ல வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜமா மஸ்ஜித் நுழைவு வாயில்களில் சில நாட்களுக்கு முன் இந்த தடை அறிவிப்பு வைக்கப்பட்டது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த விவகாரம் தொடர்பாக ஜமா மஸ்ஜித் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், இதுபோன்ற தடையை பிறப்பிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜமா மஸ்ஜித்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சபியுல்லா கான், “பெண்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவிடுவதை தடுக்கவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது நமாஸ் செய்ய அங்குள்ளவர்களுக்கு இடையூறு விளைவிக்கிறது. ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் வரும் பெண்கள் மற்றும் திருமணமான தம்பதிகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in