9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு: அதிரடிக்கு தயாராகும் மதுரை ஜல்லிக்கட்டுப்போட்டி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லுாரில் ஜன.17 தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ள காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் ஜன.10-ம் தேதி மதியம் தொடங்கியது. நேற்று மாலை 5 மணியுடன் பதிவு நிறைவடைந்தது. இதில் ஜல்லிக்கட்டு 3 போட்டிகளில் பங்கேற்க 9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணையம் மூலம் பதிவு செய்தோரின் சான்று சரிபார்த்து தகுதியானவர் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய முடியும்.  டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள், காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in