
கல்லூரி விழாவில் மேடை ஏறி ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்ட மாணவரை கண்டித்த பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர் ஒருவர் மேடை ஏறி இருக்கிறார். அப்போது சக மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். ஜெய் ஸ்ரீராம் நண்பர்களே என அவரும் பதிலுக்கு கூறி இருக்கிறார். உடனே அங்கிருந்து பேராசிரியை மம்தா கௌதம் இந்த கோஷங்களை எழுப்பக்கூடாது என்று கூறி மேடையில் இருந்து மாணவரை கீழே இறக்கி இருக்கிறார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து பேராசிரியை மம்தா கௌதம் உட்பட இரண்டு பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருக்கிறது. கல்லூரி விழாவில் ஜெய் ஸ்ரீராம் போட்ட மாணவர்களை கண்டித்த கல்லூரி பேராசிரியை உள்பட இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்திருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.