ஜாகுவார் லேண்ட்ரோவர்
ஜாகுவார் லேண்ட்ரோவர்

குட் நியூஸ்... தமிழகத்தில் தயாராகப் போகிறது ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார்கள்; வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகவுள்ளது. ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்படும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்து, உலகின் தலைசிறந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவுள்ளது. ராணிப்பேட்டையில், புதிதாக அமையவுள்ள டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதுகுறித்தான தகவலை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமானது தெரிவித்துள்ளது.

ஜாகுவார் லேண்ட்ரோவர்
ஜாகுவார் லேண்ட்ரோவர்

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டாரஸ் நிறுவனத்தின் முதலீட்டால் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது. ராணிப்பேட்டை தொழிற்சாலை மூலமாக ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் , சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தற்போது, இந்தியாவில் விற்பனையாகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தயாராகப் போகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள்.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 13.3.2024 முகாம் அலுவலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலையில் மூன்றில் இரண்டு பங்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்யவும், மீதமுள்ளவை டாடா மின்சார வாகனங்களுக்காகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in