நாட்டின் 14 வது துணை ஜனாதிபதி: பதவியேற்றுக் கொண்டார் ஜக்தீப் தங்கார்!

நாட்டின் 14 வது துணை ஜனாதிபதி: பதவியேற்றுக் கொண்டார் ஜக்தீப் தங்கார்!

இந்தியாவின் 14 வது குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தங்கார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுகொண்ட ஜக்தீப் தங்காருக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜக்தீப் தங்கார், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தோல்வியடைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in