ஜருகண்டி ஜருகண்டி... ஆந்திராவில் 21 நாட்கள் ஜெகன்மோகன் ரெட்டி பேருந்து யாத்திரை!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பேருந்து யாத்திரை
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பேருந்து யாத்திரை

மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலம் முழுவதும் 21 நாள் பேருந்து யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 25 மக்களவைத் தொகுதி மற்றும் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நந்திகம் சுரேஷ், டி.பிரசாதா ராவ், பி.ஜான்சி லட்சுமி, ஜி.உமா பாலா, வி.விஜயசாய் ரெட்டி, ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி ஆகியோர் இக்கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

ஆந்திர பிரதேசத்தில் வரும் மே 13-ம் தேதி நடைபெறும் 4வது கட்டத் தேர்தலில் ஒரே கட்டமாக மக்களவை, சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி 21 நாள் பேருந்து பயண பிரசாரத்துக்கு திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில்  பிரதமர் மோடி, சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண்
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண்

இந்த பிரசார பயணமானது வரும் 26 அல்லது 27-ம் தேதி துவங்கும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி நடைபெறும் இந்த பிரசாரம் காலையில் மக்கள் சந்திப்பும், மாலையில் பொதுக்கூட்டம் என்ற முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அங்கு மக்களவை தேர்தலில் பாஜக 6 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 17 தொகுதிகளிலும், ஜனசேனா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இதேபோல் சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்தேசம் 144 தொகுதிகள், ஜனசேனா 21 தொகுதிகள், பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதுதவிர இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால் அங்கு ஜெகன்மோகன் ரெட்டிக்கும் - சந்திரபாபு நாயுடு கூட்டணிக்கும் இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in