ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி: விரைவில் அணிக்கு திரும்புவேன் என அறிவிப்பு

ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி: விரைவில் அணிக்கு திரும்புவேன் என அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. விரைவில் அணிக்கு திரும்புவேன் என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஜடேஜாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ள ஜடேஜா, முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும் விரைவில் கிரிக்கெட்டுக்கு திரும்பவேன் என்றும் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பிசிசிஐ, எனது அணியினர், துணை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரின் ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவேன். என்னால் முடிந்தவரை விரைவில் கிரிக்கெட்டுக்குத் திரும்ப முயற்சிப்பேன். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in