வேலை கிடைக்காத விரக்தி: 25 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு

வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலைவேலை கிடைக்காத விரக்தி: 25 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை அருகில் உள்ள கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழிலாளி. இவரது இளைய மகன் கவித்(25). பி.காம் பட்டதாரியான கவித் படிப்பு முடிந்த காலம் முதலே வேலைதேடி வந்தார். ஆனால் அவருக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. அவரது சகோதரர் கலையரசனிடமும்(28) இதுகுறித்து கவித் தொடர்ந்து புலம்பி வந்தார். கலையரசனும், தன் சகோதரனிடம் நல்லவேலை கிடைக்கும் மனம் தளராமல் காத்திரு. நானும், உனக்கு நல்ல வேலைத் தேடுகிறேன் என ஆறுதல் கூறிவந்தார்.

இந்த மன வருத்தத்தில் இருந்த கவித் நேற்று இரவு தூங்கச் சென்றார். இன்று காலையில் அவரது அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேந்திரன் உள்ளிட்டக் குடும்பத்தினர் கவித்தின் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கவித் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணவாளக்குறிச்சி போலீஸார் கவித் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in