
நொய்டாவில் 9 வது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த ஐ.டி ஊழியர் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், நொய்டாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் 42 வயது ஊழியர் பணிபுரிந்து வந்தார். இதற்கு முன் இவர் பெங்களூருவில் இருந்தவர், பின் நொய்டாவில் குடியேறினார். இவர் அங்குள்ள கிராண்ட் ஓமேக்ஸ் சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென்று ஐ.டி ஊழியர் தன் குடியிருந்த 9வது மாடியில் இருந்து நேற்று விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊழியர், 9 வது மாடியில் இருந்து விழுந்த ஐ.டி. ஊழியர் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்து கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கீழே தள்ளி கொலை செய்தனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.