`அசீம் வெற்றியாளர் என்பது அதிர்ச்சி அளித்தது'- பிக்பாஸ் ஷிவின்

பிக்பாஸ் - சிவின்
பிக்பாஸ் - சிவின்அசீம் வெற்றியாளர் என்பது அதிர்ச்சி அளித்தது - பிக்பாஸ் சிவின் பேட்டி

’’பிக்பாஸ் வீட்டில் அசீன் உண்மையாக இருந்தது இல்லை, கேமரா வெளிச்சம் தன் மீது பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு தொடர்பே இல்லாத விவகாரங்களில் மூக்கை நுழைப்பார். அவர் வெற்றியாளர் என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது’’ - என பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடித்த ஷிவின் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிக்பாஸ் போட்டியாளர் ஷிவின் கணேசன், ‘’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்தவுடன் ஒரு இடைவெளி தேவைப்பட்டது. நண்பர்களுடன் நாட்களை கழித்தேன். தற்போது அனைவரையும் சந்திக்க மீண்டும் வந்துவிட்டேன். இவ்வளவு அன்பு தமிழ் மக்கள் கொடுப்பார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

என்னுடைய போட்டியாளராக அசீமை நினைத்து இல்லை. விக்ரமனை போட்டியாளராக நினைத்தேன். ஏனெனில், எல்லா விதத்திலும் அவரது பங்களிப்பு இருந்தது. பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது அசீம் உண்மையாக இல்லை, கேமராக்களுக்காக நடித்தார். அதனை வீட்டின் உள் கமல்ஹாசன் முன்னிலையில் பலமுறை தெரிவித்து உள்ளேன்.

ஷிவின் மற்றும் அசீம்
ஷிவின் மற்றும் அசீம்’’அசீம் வெற்றியாளர் என்பது அதிர்ச்சி அளித்தது’’ - பிக்பாஸ் ஷிவின்

அசீம் பொறுத்தவரை நடந்த சம்பவத்தை குறித்து பேசமாட்டார். தனிமனித தாக்குதலில் மட்டுமே ஈடுபடுவார். அவர் இந்த சீசன் வெற்றியாளர் என்பது அதிர்ச்சியாக தான் இருந்தது. யார் வெற்றிப் பெறுவார்கள் என கேட்கும் போது கூட நான் உட்பட அனைவரும் விக்ரமன் என கத்தினோம். சக போட்டியாளராக விக்ரமனை மிகவும் பிடிக்கும், அந்த வீட்டில் எனக்கு மிகவும் நெருக்கமானவர் ரக்‌ஷிதா.

பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்டியாளர்கள்’’அசீம் வெற்றியாளர் என்பது அதிர்ச்சி அளித்தது’’ - பிக்பாஸ் ஷிவின்

அசீம் வெற்றி குறித்து விமர்சனங்கள் வருவது இயல்பு தான். விக்ரமன் மற்றும் அசீம் இருவரது பேட்டியையும் நான் பார்க்கவில்லை. அவர் வீட்டினுள் நடந்துக் கொண்ட விதம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல நேரங்களில் நானே அவரிடம் இருந்து ஒதுங்கி இருந்துள்ளேன். சக போட்டியாளர்களை அடிக்கடி சந்திப்பது உண்டு. அவர்களது நட்பு தொடர்கிறது, தொடரும்’’ என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in