ஒரு பக்கம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; மறுபக்கம் ஐடி ரெய்டு: பின்னணி என்ன?

ஒரு பக்கம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; மறுபக்கம் ஐடி ரெய்டு: பின்னணி என்ன?

பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களான கே.ஹெச். குரூப் (KH Group) நிறுவனங்கள் மற்றும் ஃபரிதா தோல்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.ஹெச். குரூப் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய சென்னை, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1947-ம் ஆண்டு கிசார் ஹுசைன் என்பவரால் கே.எச் குரூப் தொழிற்சாலை ராணிப்பேட்டையில் நிறுவப்பட்டது. அதே போன்று 1985-ம் ஆண்டு Rabia Leather Industries Private Limited என்ற கிளை நிறுவனம் தொடங்கப்பட்டு பின்பு 2013-ம் ஆண்டு K.H Exports India Private Limited பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின் அடுத்தடுத்து கிளைகளான KH ஷூஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் MA Khizar Hussain & Sons ஆகியவையும் பின்வந்த ஆண்டுகளில் KH Arind Private Limited, KH எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் KH எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்டன. மொத்தமாக இந்த கே.ஹெச். குரூப் தோல்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் சதுர அடி தோல் பதனிடுதல், 3 மில்லியன் ஜோடி காலணிகள் தயாரித்தல், 9 லட்சம் தோல் பைகள் தயாரித்தல், 3 மில்லியன் சிறிய தோல் பொருட்கள் தயாரித்தல், 2 மில்லியன் கையுறைகள் ஆகியவற்றை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து நிறைய இடங்களில் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் வாங்கி இருப்பதும், பல தனியார் நிறுவனங்களை தன்னுடன் இணைத்து தோல் பொருட்கள் தயாரித்து வந்ததும், அப்படி தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் வருமானத்தை குறைத்துக் காட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று காலை முதல் கே.ஹெச் குரூப் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனமான ஃபரிதா லெதர் கம்பெனி என சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள கே.ஹெச். குரூப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆறு மணியிலிருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் கே.ஹெச் குரூப்பின் தலைமை அலுவலகம், ராமாபுரத்தில் உள்ள அலுவலகம் மற்றும் அதன் நிறுவனங்களிலும் மண்ணடியில் பெரியண்ண மேஸ்திரி தெருவில் உள்ள ஃபரிதா லெதர் கம்பெனியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சுமார் 2,250 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மேலும் இராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் மெகா காலணிப் பொருட்கள் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பெரிய லெதர் நிறுவனமான கே.ஹெச் மற்றும் ஃபரிதா குழுமங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக அந்த நிறுவனங்களில் தொடர்புடையவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in