3 நாட்களாக நடந்த ஐடி சோதனை நிறைவு: அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ன?

3 நாட்களாக நடந்த ஐடி சோதனை நிறைவு: அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ன?

மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி வருமானவரித்துறை சோதனை தொடங்கியது. 'பிகில்' பட வருவாயில் வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.

இதில், சென்னையில் 10 இடத்திலும் மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அன்புச்செழியன் வீடு அவரது தம்பி அழகர்சாமி வீடு, கோபுரம் திரையரங்கம், கோபுரம் பைனான்ஸ் அலுவலகம், கோபுரம் ரெசிடன்சி என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்த சோதனை மாலை நிறைவடைந்தது. இதில், அன்புச்செழியன் வீட்டில் இருந்து வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in