மின்னல் வேகத்தில் வந்த கார்; தூக்கி வீசப்பட்ட ஐடி பெண் ஊழியர்கள் பலி: ஓஎம்ஆர் சாலையில் பயங்கரம்

மின்னல் வேகத்தில் வந்த கார்; தூக்கி வீசப்பட்ட ஐடி பெண் ஊழியர்கள் பலி: ஓஎம்ஆர் சாலையில் பயங்கரம்

ஓஎம்ஆர் சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு காா் மோதி, சாலையோரம் நடந்து சென்ற 2 பெண் மென்பொறியாளா்கள் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் லட்சுமி (23). இவர் சென்னை சோளிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஹெச்சிஎல் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில், ஆந்திர மாநிலம் சித்தூரை சோ்ந்த லாவண்யா (23) என்ற மென்பொறியாளரும் பணியாற்றி வந்தார். இருவரும் ஓஎம்ஆர் சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்று இரவு 11 மணியளவில் அலுவலக பணி முடிந்து இருவரும் பேசிக்கொண்டே ஓஎம்ஆர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காா் ஒன்று இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் லட்சுமி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லாவண்யா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து ஓடிவந்த பொதுமக்கள் விரட்டி சென்று விபத்து ஏற்படுத்திய காரை மடக்கி பிடித்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாவண்யாவும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய சோழிங்கநல்லூரை சேர்ந்த மோதீஸ்குமார் (20) என்பவரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in