30 நாடுகள், 450 நாட்கள் பயணம்: லண்டனுக்கு சைக்கிளில் செல்லும் கேரள ஐடி ஊழியர்

30 நாடுகள், 450 நாட்கள் பயணம்: லண்டனுக்கு சைக்கிளில் செல்லும் கேரள ஐடி ஊழியர்

கேரளத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் கேரளத்தில் இருந்து, லண்டனுக்கு சைக்கிளிலேயே செல்லும் ஆசையை நிறைவேற்ற தான் பார்த்துவந்த மென்பொருள் நிறுவன வேலையையே விட்டுள்ளார்.

சைக்கிள் பயணம் தொடக்கம்
சைக்கிள் பயணம் தொடக்கம்

கேரளத்தைச் சேர்ந்தவர் பைஸ் அப்ரஸ் அலி(34). இவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிசெய்து வந்தார். பொதுவாகவே இவருக்கு பயணங்களின் மீது அலாதி பிரியம் உண்டு. அந்தவகையில் இப்போது கேரளாவில் இருந்து, லண்டன் வரை சைக்கிளிலேயே செல்ல முடிவுசெய்தார். நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்த அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் இவர் திருவனந்தபுரத்தில் இருந்து சுதந்திர தின நாளில் தனது நடைபயணத்தைத் தொடங்கினார்.

கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி இந்தப் பயணத்தைத் தொடங்கிவைத்தார். உலக நாடுகளுக்கு இடையே அமைதி, அன்பு ஆகியவற்றைப் போதிப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்றுசொல்லும் பைஸ் அப்ரஸ் அலி, இந்தப்பயணத்தை 450 நாள்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். சற்றேறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் நீடிக்கும் இந்தப் பயணத்திற்காக தான் பார்த்துவந்த ஐடி வேலையையும் விட்டுள்ளார் அப்ரஸ் அலி.

இதைப்பற்றிப் பேசிய அவர், “மொத்தம் 30 நாடுகளை இடையில் கடப்பேன். பாகிஸ்தானும், சீனாவும் எனக்கு விசா வழங்கவில்லை. அதனால் அந்த இருநாடுகளுக்கும் செல்லமாட்டேன். இங்கிருந்து மும்பைக்கு சைக்கிளில் போய், அங்கிருந்து விமானம் வழியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு போய், அங்கிருந்து மீண்டும் சைக்கிளிலேயே சவுதி, பக்ரைன், குவைத், ஈராக், ஈரான், துருக்கி, ஐரோப்பிய நாடுகள் வழியாக லண்டன் செல்வேன்” என்றார்.

இதற்கு முன்பு இதேபோல் கோழிக்கோட்டில் இருந்து சிங்கப்பூர் வரை சைக்கிளில் சென்ற அப்ரஸ் அலி அடுத்த முயற்சியாக லண்டனுக்கு சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in