சூரியனை ஆராய புறப்பட்ட ஆதித்யா எல்-1... புவியின் 3வது சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

புவி சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா எல்-1
புவி சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா எல்-1

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம், 3-வது புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி இலக்கை அடையும். அதற்கு பின்னர் கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும்.

இந்நிலையில் சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3-வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. வரும் 15-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in