இஸ்ரோவின் இமாலய சாதனை... வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட 'ஆதித்யா எல்-1'!

இலக்கை அடைந்தது 'ஆதித்யா எல்-1'
இலக்கை அடைந்தது 'ஆதித்யா எல்-1'
Updated on
2 min read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் சூரிய ஆய்வு விண்கலமான 'ஆதித்யா எல்-1’ அதன் இலக்கை அடைந்து வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

 எல்-1 புள்ளியை விளக்கும் படம்.
எல்-1 புள்ளியை விளக்கும் படம்.

சூரியனை ஆராய்வதற்காக 'ஆதித்யா எல்-1’ என்ற அதிநவீன விண்கலத்தை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

சூரியனின் செயல்பாடுகளையும், வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராய இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள 'லாக்ராஞ்ச் புள்ளி ஒன்று' என்ற இடத்தில் 'ஆதித்யா எல்-1’ விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. 125 நாள்கள் பயணத்துக்குப் பிறகு 'ஆதித்யா எல்-1’ விண்கலம் தனது இலக்கான 'எல்-1’ புள்ளியை திட்டமிட்டபடி, இன்று மாலை 4 மணிக்கு அடைந்துள்ளது.

லாக்ராஞ்ச் புள்ளி என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசைகள் சமநிலை அடையும் ஒரு தனித்துவமான பகுதியாகும். சந்திரன், செவ்வாய் மற்றும் வீனஸ் போன்ற பிற கோள்களின் தாக்கம் காரணமாக விண்வெளியில் முழு சமநிலையைப் பெற முடியாத நிலை உள்ளது. ஆனால், 'எல் 1’ புள்ளியானது தடையின்றி ஆய்வை மேற்கொள்ளும் ஒரு சமநிலையான இடமாகும்.

ஆதித்யா எல் 1 விண்கலம் தனது இலக்கான எல் 1 புள்ளியை எட்டியதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் பாராட்டு.
பிரதமர் பாராட்டு.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா மற்றொரு மைல்கல்லை அடைந்துள்ளது. இந்தியாவின் முதல் சூரிய கண்காணிப்பு விண்கலம் ஆதித்யா-எல் 1 அதன் இலக்கை அடைகிறது. மிகவும் சிக்கலான விண்வெளி ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையைப் பாராட்டுவதில் நான் தேசத்துடன் இணைகிறேன். மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய பரிமாணங்களை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in