ரஷ்யாவின் லூனா 25 தோல்வி; உலகளவில் கவனம் பெற்ற இஸ்ரோ தலைவரின் பதில்!

இந்திய சந்திரயான 3 - ரஷ்ய லூனா 25
இந்திய சந்திரயான 3 - ரஷ்ய லூனா 25

சந்திரனின் தென் துருவத்தை குறிவைத்த ரஷ்யா - இந்தியா இடையிலான முயற்சிகளில், முந்திச் சென்ற ரஷ்யாவை நிதானமாக முன்னேறிய இந்தியா சாதித்திருக்கிறது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னர் அளித்த பதிலும் கவனம் பெற்றிருக்கிறது.

அமெரிக்கா, சீனா, சோவியத் ரஷ்யா ஆகியவற்றுக்கு அப்பால் நான்காவது நாடாக இந்தியா நிலவில் இறங்கியிருக்கிறது. அதன் தென் துருவத்தில் தடம் பதித்த வகையிலும், உலக நாடுகளின் மத்தியில் இந்தியா தனி சாதனை படைத்திருக்கிறது. இவற்றில் ரஷ்யாவின் லூனா -25 திட்டம் தோல்வியில் முடிய, இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதும் கவனம் ஈர்த்துள்ளது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவற்றோடு ஒப்பிடுகையில், இந்திய ராக்கெட்டுகள் பின்தங்கியவை. இதன் காரணமாக பூமி மற்றும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதைகளில் நிதானமாக சுற்றிபடி, 40 நாட்களில் படிப்படியாக நிலவை நோக்கி நெருங்கியது சந்திரயான் -3 விண்கலம். ஆனால் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் மேம்பட்டது மற்றும் அதிசக்தி மிக்கது. எனவே சந்திரயானுக்குப் பின்னர் ஏவப்பட்டு, சந்திரயானை முந்திக்கொண்டு நிலவை அடைந்தது. ஆனால் நிலவில் இறங்கும் லூனா -25 முயற்சிகள் தோல்வியடைந்ததில், அது நிலவின் பரப்பில் மோதி நொறுங்கியது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ரஷ்யா - இந்தியா ஆகிய நாடுகளின் நிலவை நோக்கிய விண்வெளிப் பயணங்கள், சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யா அளவுக்கு ராக்கெட் திறம் இல்லாதபோதும், மாற்றிய யோசித்த இஸ்ரோ வடிவமைத்த சந்திரயான் தற்போது சாதனை புரிந்திருக்கிறது. முந்தைய சந்திரயான் -2 தோல்வியின் பாடங்களில் இருந்து தன்னை தகவமைத்துக்கொண்டு சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டதும், அதற்கு உரிய காலத்தை இஸ்ரோ எடுத்துக்கொண்டதும் இந்திய வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது.

ஆனால், ரஷ்யா காட்டிய வேகமும், அவசரமும் அதன் லூனா 25 திட்டத்தை தோல்வியில் தள்ளியிருக்கிறது. இந்த லூனா 25 தோல்வி குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலும் பரவலாக கவனம் ஈர்த்துள்ளது.

”செயல்பாடுகளில் கிடைக்கும் தோல்வி என்பது இயல்பான ஒன்று தான். ரஷ்யாவின் லூனா 25 தோல்வியடைந்ததில் எங்களுக்கு வருத்தமே” என சந்திரயான் திட்டங்களை கட்டமைத்ததில் காட்டிய நிதானத்தோடு சோம்நாத் பதில் அளித்துள்ளார். இந்த பதில் உலகரங்கில், இந்தியாவின் மீது மேலும் நன்மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in