கூகுளில் இந்தியர்கள் இந்த ஆண்டு அதிகம் தேடியது இதையா?: ஆச்சரியப்படுத்தும் தகவல்

கூகுளில் இந்தியர்கள் இந்த ஆண்டு அதிகம் தேடியது இதையா?: ஆச்சரியப்படுத்தும் தகவல்

இந்திய அளவில் 2022-ம் ஆண்டு கூகுளில் அதிக தேடப்பட்டவை எவை என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டின் இறுதியில் கூகுளில் அதிகம் என்ன தேடப்பட்டவை என்பது குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டு வருகிறது. அத்துடன் அனைத்து நாடுகளைச் சேர்த்து ஒட்டு மொத்தமாகவும், ஒவ்வொரு நாடாக அதன் தகவல்களையும் கூகுள் வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவின் அதிக தேடல்களைக் கூகுள் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியர்களின் ரசனையை புரிந்து கொள்ள முடியும்.

2022-ம் ஆண்டு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்ற தலைப்புகளில் தான் அதிக தேடல்கள் கூகுளில் இருந்துள்ளன. அதன்படி, இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி 20 தொடர்தான், இந்தியாவின் ஒட்டுமொத்த தேடல்களிலும் முதலிடத்தில் இருந்துள்ளது. மேலும், விளையாட்டு சார்ந்த தேடல்களிலும் அதுவே முதலிடத்திலேயே நீடிக்கிறது.

அதன் பின், கரோனா தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான CoWIN தேடல்களில் இரண்டாவது இடத்தையும், நவ. 20-ம் தேதி, கத்தாரில் தொடங்கிய ஃபிஃபா உலகக்கோப்பை தொடர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தற்போது இப்போட்டி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in