பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்படுபவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் 21 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வாரம் நாமினேஷனில் ராபர்ட். நிவாஷினி, ஆயிஷா, விக்ரமன், அசீம், கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் ராபர்ட்., ஆயிஷா, நிவாஷினி ஆகிய மூவரும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர். இந்த வாரம் நிவாஷினி குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in