இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தானா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தானா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியவரின் பெயர் லீக்காகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் ஆறாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் டாஸ்க்குகளில் சரியாக விளையாடாத போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே யூடிப்பர் ஜி.பி.முத்து, நடன இயக்குநர் சாந்தி, பாடகர் அசல் கோலார் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் ஷெரினா வெளியேறினார். இதையடுத்து இந்த வார நாமினேஷனில் அசீம், விஜே மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன் உள்ளிட்டோர் நாமினேஷனில் இடம்பெறவில்லை. மற்றப்படி ரச்சிதா, விஜே கதிரவன், ஷிவின் ஆகியோர் சேஃப் ஜோனில் உள்ளனர்.

இந்நிலையில் நாமினேஷன் செய்த 7 பேரில் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in