ஜனவரி 18-ல் பள்ளிகளுக்கு விடுமுறையா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

ஜனவரி 18-ல் பள்ளிகளுக்கு விடுமுறையா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக வரும் 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி சென்றனர். நேற்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டு பொங்கலை ஒட்டி பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாளை உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது.

மக்கள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நாளை காணும் பொங்கலை ஒட்டி பல்வேறு பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே வரும் 18-ம் தேதி பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளது. இதனால் மக்கள் நாளை சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 18-ம் தேதி பள்ளிகள் செயல்பட இருக்கிறது.

இதனிடையே, வரும் 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் வரும் 18-ம் தேதி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர், ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு எந்த முடிவு எடுக்கவில்லை என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பால் வரும் 18-ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in