டெல்லியில் பரவியிருப்பது அமெரிக்கா கரோனா?

டெல்லியில் பரவியிருப்பது அமெரிக்கா கரோனா?

டெல்லியில் கரோனா திடீரென அதிகரித்திருப்பதற்கு, அமெரிக்காவின் ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் காரணமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு புதிய ஒமைக்ரான் வகை கரோனாவின் உருமாறிய வைரஸே காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறை பரிசோதனையில், இதுவரை ஒமைக்ரானின் உருமாறிய 8 வகையான வைரஸ்கள் பரவி வருகின்றன. அவற்றில், பிஏ.2.12 மற்றும் பிஏ.2.12.1 மற்றும் அதன் வேறுபட்ட வகையான பிஏ.2 - இது அமெரிக்காவில் பரவி வருகிறது.

டெல்லியில் பதிவான கரோனா பாதிப்புகளின் மாதிரிகளை பரிசோதித்ததில் அமெரிக்காவில் பரவி வரும் வைரஸ்கள் இருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த உருமாறிய வைரஸ்களால் தான் இந்தியாவில் திடீரென கரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கரோனா பாதித்தவர்களின் மாதிரிகளை மரபணு வரிசை முறை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 97 சதவீதம் ஒமைக்ரானின் உருமாறிய வைரஸ் பாதிப்பாகவும், 2 சதவீதம்மட்டுமே 2021-ம் ஆண்டு பல உயிர்களை பலி கொண்ட டெல்டா வகை வைரஸாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.