100 நாள் வேலைத் திட்டம் முடங்குகிறதா? - மக்கள் அச்சம்!

100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் மகளிர்
100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் மகளிர்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 100 நாள் வேலை திட்டம் முடங்கி விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ” மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்”. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு உடலுழைப்பு சார்ந்த வேலைகள் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளத்தை மத்திய அமைச்சகமானது, தொழிலாளர் ஊதிய உயர்வு சட்டம் 6சியின் படி அவ்வப்போது நிர்ணயிக்கிறது. இந்த சம்பள விகிதமானது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக உயரத்தப்படும்.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் சம்பள விகிதமானது 4.63 சதவீதம் உயர்த்தப்பட்டு, 281 ரூபாயாக இருந்த ஒருநாள் ஊதியம் 294 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட சதவீதத்தின்படி சம்பள உயர்வை மத்திய அரசு அமல்படுத்தி இருந்தது.

ஆனால் தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கும் தொகையை வெகுவாக குறைத்து ஊரக வேலைத்திட்ட ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த 2022 – 2023ம் நிதியாண்டில் 89,000 கோடி ரூபாயை இத்திட்டத்துக்கு ஒதுக்கிய மத்திய அரசு, இதனை நடப்பாண்டில் 60,000 ரூபாயாக குறைத்துள்ளது. இந்த நிதியானது தேவை இருப்பின் அதிகரிக்கப்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் சரிவர ஊதியம் கிடைக்கப்பெறுவதில்லை, வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆட்கள் வேலைக்கு வராமல் ஊதிய கணக்கு காட்டப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும் வேளையில், மத்திய அரசு இதற்கான நிதியை குறைத்து இருப்பது, 100 நாள் வேலை திட்டம் முடங்கி விடுமோ என்ற அதிர்ச்சியை மக்கள் மனதில் எழச்செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in