புகைப்படத்தை வைத்து மிரட்டிய பெண்; உடந்தையான போலீஸ்காரர்: தற்கொலை செய்த டிராவல்ஸ் உரிமையாளர் அதிர்ச்சி கடிதம்

சரவணசெல்வம்
சரவணசெல்வம்

தனது சாவுக்கு தனலட்சுமி என்ற பெண்ணும், ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸ்காரர்கள் மூன்று பேரும்தான் காரணம் என டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவண செல்வம் எழுதிய கடிதம்
சரவண செல்வம் எழுதிய கடிதம்

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணசெல்வம்(39). இவர் சொந்தமாக வாடகை கார் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு லாவண்யா என்கிற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். சரவண செல்வத்துக்கும் அவரது டிராவல்ஸ் அருகில் தையல் கடை வைத்திருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் சிலவருடங்களாக பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்திருக்கின்றனர். இது இரண்டு குடும்பத்திற்கும் தெரிந்தே நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில காரணங்களுக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக தொடர்பை துண்டித்துக் கொண்டிருக்கின்றனர். சரவணசெல்வம் தனலட்சுமிக்கு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளதாகவும், இந்த நிலையில் சரவணசெல்வத்திடம் மேலும் பணம் கேட்டு தனலட்சுமி தொல்லை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. தன்னுடன் சரவணசெல்வம் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தனலட்சுமி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சரவணசெல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் அறை கதவு திறக்காததை கண்டு கவலையடைந்த மனைவி லாவண்யா கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை மனைவி லாவண்யா குடும்பத்தினர் கைப்பற்றி போலீஸாரிடம் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில் தன் மரணத்திற்கு தனலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் காரணம் என்றும், மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக தன் மீது பொய் வழக்கு போடும் ஸ்ரீரங்கம் உளவுத்துறை ஏட்டு திருமுருகன், எழுத்தர் முத்துசாமி, உதவி ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர்தான் என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் காவல் துறையினர் சரவணசெல்வத்தின் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in