அம்பானி, அதானியை ஒரே ஆண்டில் ஓவர் டேக் செய்த பிரபல பெண் தொழிலதிபர் இவரா?

ஜிண்டால் நிறுவன அதிபர் சாவித்ரி ஜிண்டால் முதலிடம்
ஜிண்டால் நிறுவன அதிபர் சாவித்ரி ஜிண்டால் முதலிடம்

கடந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகளவு வருமானத்தை பெற்ற இந்திய தொழிலதிபர்கள் பட்டியலில் அம்பானி, அதானி ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாவித்ரி ஜிண்டால் புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதிகமான சொத்து சேர்த்த இந்திய பணக்காரர் பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நாட்டின் பெரும் பணக்காரர் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து வருகிறார்.

இவரது சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் $9.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு $ 25 பில்லியன் டாலராக உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி

ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர் மட்டுமே உயர்ந்துள்ளது. இவர் $92.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அதேபோல் ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்தவர் பட்டியலில் ஹெச்.சி.எல் நிறுவன அதிபர் ஷிவ் நாடார் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரே ஆண்டில் $8 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளார்.

 கவுதம் அதானி
கவுதம் அதானி
ஹெச்.சி.எல் நிறுவன அதிபர் ஷிவ் நாடார்
ஹெச்.சி.எல் நிறுவன அதிபர் ஷிவ் நாடார்

டிஎல்எப் நிறுவன அதிபர் கேபி சிங் #7 பில்லியன் டாலருடன் 3-வது இடம் பிடித்துள்ளார். குமார் மங்கலம் பிர்லா மற்றும் ஷாபூர் மிஸ்திரி ஆகியோர் தலா $6.3 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடம் பிடித்துள்ளனர். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் $35.4 பில்லியன் டாலர் குறைந்து $85.1 பில்லியன் டாலராக இருந்து வந்தாலும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in