பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா நடிகை மியா கலிஃபா?

பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா   நடிகை மியா கலிஃபா?

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகை மியா கலிஃபா வர இருப்பதாக செய்தி பரவியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி 50-வது நாளை நெருங்கியுள்ளது.

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் 16-வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது ஒரு முக்கியமான நபர், வைல்டு கார்டு எண்ட்ரியாக வர உள்ளதாக செய்தி பரவி வருகிறது.

ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை மியா கலிஃபா இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக பங்கேற்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன்னி லியோன் ஒருமுறை போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அவரைப் போலவே, நடிகை மியா கலிஃபாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், " நான் எப்போதும் இந்தியாவில் கால் எடுத்து வைக்கமாட்டேன். நான் பிக் பாஸ் வீட்டிற்கு வர ஆர்வம் காட்டியதாகச் சொன்னவர்களை முதலில் வேலையை விட்டு தூக்குங்க'" என மியா கலிஃபா கொந்தளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in