உங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா?- சரி பார்ப்பது எப்படி?

உங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா?- சரி பார்ப்பது எப்படி?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 28-ம் தேதி முதல் மின்நுகர்வோர்கள் தங்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மேலும் மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை மின்வாரியம் அறிமுகம் செய்திருந்தது. முதலில் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று மின்வாரியம் அறிவித்து இருந்தது.

இதனைத்தொடர்ந்து மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதாவது, ஜனவரி 31-ம் தேதி வரை மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் 2.26 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்திருக்கிறது. நாளை கடைசிநாள் என்பதால் தங்கள் மின்நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

இதனிடையே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in