இடிந்து விழுந்த தொகுப்பு வீடு: இருளர் குடும்பத்தினருக்கு நேர்ந்த துயரம்!

இடிந்து விழுந்த தொகுப்பு வீடு: இருளர் குடும்பத்தினருக்கு நேர்ந்த துயரம்!

தரமில்லாத தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததால் அந்த வீட்டில் வசித்த இருளர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவைக்கு அருகே உள்ளது அத்தியானம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் இருளர்களுக்காக கடந்த 2016-2017 நிதியாண்டில் தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு ஒன்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் அஜித்(27), அவரின் மனைவி செல்வி நான்கு வயது பெண் குழந்தை ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு கலவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித் வாலாஜா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in