இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: விஏஓ, தலையாரி நிரந்தர பணி நீக்கம்

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்

அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு செய்த கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆரைக்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் மாடசாமி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசின் இலவச வீட்டுமனைப் பட்டாவை தனது உறவினருக்கு வழங்கியுள்ளார். இதேபோல் தலையாரியாக இங்கு பணியாற்றிய மந்திர மூர்த்தியும் தன் உறவினர் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். மறு ஆண்டே 2019-ம் ஆண்டு இருவரும் இந்த வீடுகளை தங்கள் குடும்பப் பெயர்களுக்கு மாற்றம் செய்துகொண்டனர்.

இலவச வீட்டுமனைப் பட்டாக்களை 20 ஆண்டுகளுக்கு விற்கவோ, வாங்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ கூடாது. இப்படியான சூழலில் மாடசாமியும், மந்திர மூர்த்தியும் இதில் முறைகேடு செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் நெல்லை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். கூடவே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களையும் இணைத்து இருந்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நெல்லை கோட்டாட்சியர் சந்திரசேகர், வி.ஏ.ஓ மாடசாமி, தலையாரி மந்திர மூர்த்தி ஆகிய இருவரையும் நிரந்தரமாக பணி நீக்கி இன்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in