கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் பெறும் வசதி: அமைச்சர் சக்கரபாணி புதுத் தகவல்!

கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் பெறும் வசதி: அமைச்சர் சக்கரபாணி புதுத் தகவல்!

கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் பெறும் வசதி வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,  “ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேடு இயந்திரத்தில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதால், மின்னணு பதிவேட்டுக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி பதிவு மூலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சில கடைகளில் மட்டும் சோதனை முறையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்குப் பதிலாகச் சம்பந்தப்பட்ட நபர் யாரைப் பரிந்துரை செய்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in