ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது... பயணிகள் கடும் அவதி!

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது... பயணிகள் கடும் அவதி!
Updated on
1 min read

ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.

ரயில்வே டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்தநிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் இன்று திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர். இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடக்கம் நிகழ்ந்துள்ளது.

இதனிடையே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய Ask Disha என்ற செயலியை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. ஐஆர்சிடிசி தனது ட்விட்டர் பக்கத்தில், "தொழில்நுட்ப காரணங்களால் டிக்கெட் சேவை கிடைக்கவில்லை. எங்கள் தொழில்நுட்பக் குழு சிக்கலை சரி செய்து வருகிறது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதும் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in