ஈரானில் போராட்டக்காரர்கள் உட்பட, 82 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

ஈரான் போராட்டம்
ஈரான் போராட்டம்

ரமலான் நோன்பு நெருங்குவதை முன்னிட்டு, ஈரான் தேசத்தில் 82 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அண்மை கிளர்ச்சியில் கைதான 22 ஆயிரம் பேரும் அடங்குவார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் மாஷா அமீனி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று ஈரானின் கலாச்சாரக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் இறந்ததை அடுத்து, ஹிஜாப் மற்றும் மத அடக்குமுறைகளுக்கு எதிராக அங்கே பெரும் போராட்டம் வெடித்தது. இதில் சிறார் உட்பட ஆயிரத்தும் மேலானோர் பலியானார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினரை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான போராட்டக்காரர்களில் சிலர் பொதுமக்கள் முன்பாக தூக்கிடப்பட்டதும் நடந்தது. இதனிடையே ஈரானில் தொடங்கிய ஹிஜாப் போராட்டம் சர்வதேச அளவிலும் பரவியது. போராட்டம் தொடங்கி 6 மாதங்களை தொடங்கிய நிலையில், ஈரான் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 82 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. இவர்களில் 22 ஆயிரம் பேர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர். ஏனையோர் மீது சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருக்கின்றன. ரமலான் நோன்பு தொடங்க இருப்பதை முன்னிட்டு, இந்த பொதுமன்னிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஈரான் தெரிவிக்கிறது. இதன் மூலம் போராட்டம் தணிய வாய்ப்புள்ளதாகவும் அது கணித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in