வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து புகார் வந்தால் சஸ்பெண்ட்: அதிகாரிகளை எச்சரித்த இறையன்பு

வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து புகார் வந்தால் சஸ்பெண்ட்: அதிகாரிகளை எச்சரித்த இறையன்பு

வெள்ளத் தடுப்பு பணிகள் முடிவு பெறாமல் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு, மக்களிடமிருந்து புகார்கள் வந்தால் அதற்குக் காரணமான அனைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் வெள்ள பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாகத் தாம்பரம், கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர், வேளச்சேரி, பெருங்களத்தூர் எனச் சென்னை பல இடங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வீடுகளை விட்டுவிட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இது போன்ற இன்னல்களைச் சென்னை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.  வடகிழக்கு பருவமழையை சமாளிக்கச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்து வருகிறார்.

குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் நடைபெற்று வரும் மழை வெள்ள தடுப்பு பணிகளைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். அந்த பணிகளை பார்வையிட்ட இறையன்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இறையன்பு, “பணிகள் முடிவு பெறாமல் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு, மக்களிடமிருந்து புகார்கள் ஏதேனும் வந்தால் இதற்குக் காரணமான அனைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in