
16-வது ஐ.பி.எல். ஏலம் கொச்சியில் தொடங்கியுள்ளது. இதில் அதிக விலைக்கு இங்கிலாந்து வீரரை ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்க உள்ள நிலையில், 10 அணிகள் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை 13.25 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை 18.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் கடந்த 2021-ல் 16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது சாம் கரண் முறியடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்
எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் சாம் கரண். இந்திய வீரர் ரஹானேவை 50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க அகர்வாலை 8.25 கோடிக்கு ஹைதராபாத் அணியும், கேன் வில்லியம்சனை 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது. இதே நேரத்தில், இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.