கத்தார் சிறையிலிருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் நடிகர் ஷாருக் கான்?

ஷாருக் கான்
ஷாருக் கான்

கத்தார் சிறையிலிருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் நடிகர் ஷாருக் கான் இருந்ததாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக ஷாருக்கானின் அலுவலகம் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் சிலர் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றி வந்தனர். இவர்களில் 8 பேர் இஸ்ரேலுக்காக, கத்தாரின் நீர்மூழ்கி ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றாச்சாட்டுக்கு ஆளானார்கள். 2022 ஆகஸ்டில் கைதான இவர்களுக்கு, கடந்தாண்டு அக்டோபரில் அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

கத்தார் பிரதமருடன் ஷாருக்
கத்தார் பிரதமருடன் ஷாருக்

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், 8 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, சட்ட ரீதியாக கத்தார் நாட்டு அரசு மற்றும் நீதிமன்றத்தை அணுகியது. அதனைத் தொடர்ந்து 8 அதிகாரிகளின் மரண தண்டனையும், சிறைத்தண்டனையாக இறக்கம் செய்யப்பட்டன. மேலும் இந்தியாவின் ராஜீய அளவிலான தொடர் முயற்சிகளால், கத்தார் சிறையிலிருந்து 8 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டதில், அவர்களில் 7 பேர் நேற்று இந்தியா திரும்பினர்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியே நேரடியாக கண்காணித்து, இந்தியர்களின் விடுதலைக்கு வழி செய்தார் என இந்திய வெளியுறவுத் துறை சார்பில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கத்தார் அரசுடன் தொடர்புடைய இந்திய பிரபலம் ஒருவரின் மத்தியஸ்தம், இதில் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியாயின. அவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நோக்கி விரல் நீட்டின. கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானியுடன் நேரடியாக உரையாடும் அளவுக்கு கத்தாரில் ஷாருக் கான் தனி செல்வாக்கு கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரமணியன் சுவாமி மற்றும் அவரது பதிவு
சுப்ரமணியன் சுவாமி மற்றும் அவரது பதிவு

ஷாருக் கான் தலையிட்டதன் பெயரிலேயே 8 இந்தியர்களும் கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பாஜக தலைவரான சுப்பிரமணியன் சுவாமியும் தகவல் பதிவிட்டார். இந்தியர்கள் விடுதலையில் பிரதமர் மோடி நேரடியாக ஈடுபட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அந்த விவகாரத்தில் ஷாருக்கான் தலை வெகுவாக உருண்டது. இதனையடுத்து இன்றைய தினம் ஷாருக்கான் அலுவலகம் சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ‘கத்தார் சிறையிலிருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதில் ஷாருக்கானின் பங்கு தொடர்பான செய்திகள் ஆதாரமற்றவை. இந்த மீட்பு நடவடிக்கையின் பின்னே இந்திய அரசாங்கம் மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் ஷாருக்கின் பங்களிப்பை சந்தேகத்திற்கு இடமின்றி மறுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in