சொந்த வீட்டில் கைவரிசை காட்டிய மகன்: சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பருடன் சிக்கினார்

சொந்த வீட்டில் கைவரிசை காட்டிய மகன்: சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பருடன் சிக்கினார்

வத்தலகுண்டுவில் நண்பருடன் சேர்ந்து கொண்டு சொந்த வீட்டில் 8 பவுன் நகை திருடிய எலக்ட்ரீசியனை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காமராஜபுரத்தைசேர்ந்த முருக பாண்டி மனைவி ஈஸ்வரி. கணவர் இறந்து விட்டதால், ஈஸ்வரி 2 மகன்களுடன் வசித்து வந்தார். இளைய மகன் ஹரிஹரன் (24), காந்தி நகரை சேர்ந்தவர் கண்ணன் (27) இவரும் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன், இருவரும் சேர்ந்து, ஈஸ்வரி வீட்டில் இல்லாத நேரத்தில், பீரோ லாக்கரில் இருந்த 8 பவுன் நகையை இருவரும் சேர்ந்து திருடினர். இதனை பங்கு பிரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து தனது தாயார் ஈஸ்வரியிடம் ஹரிஹரன் கூறினார்.

இதனடிப்படையில், வத்தலக்குண்டு போலீஸில் ஈஸ்வரி புகார் அளித்தார். எஸ்ஐ பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ஆடம்பர செலவிற்காக ஹரிகரனும், கண்ணனும் சேர்ந்து நகை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸார் 8 பவுன் நகையை மீட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in