'நானே ஓசில குடிச்சிட்டு வரேன், என்னால் ஃபைன் கட்ட முடியாது': போலீஸிடம் சிக்கிய போதை பெண் ரகளை

'நானே ஓசில குடிச்சிட்டு வரேன், என்னால் ஃபைன் கட்ட முடியாது': போலீஸிடம் சிக்கிய போதை பெண் ரகளை

சென்னையில் குடிபோதையில் போக்குவரத்து காவலர்களிடம் இளம்பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அருகே புத்தாண்டு தினத்தன்று இரவு போக்குவரத்து போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே போக்குவரத்து போலீஸார், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அப்பெண்ணிற்கு அபராதம் விதித்தனர்.

அதற்கு குடிபோதையில் இருந்த இளம்பெண் போக்குவரத்து காவலர்களிடம்," எதற்காக பைன் போட்டீர்கள், என்னிடம் காசு இல்லை, ஃபைன் கட்டமுடியாது, தினமும் குடித்துவிட்டு தான் செல்கிறேன். அப்போதெல்லாம் பிடிக்கவில்லை, இப்போ மட்டும் ஏன் ஃபைன் போடுகிறீர்கள்?" என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், " நானே ஓசில குடிச்சிட்டு வரேன். என்னால் எப்படி ஃபைன் கட்டமுடியும்?" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீஸார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், இளம்பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். போக்குவரத்து போலீஸாருடன் இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in