நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி மிரட்டல்: 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி மிரட்டல்: 10-ம் வகுப்பு மாணவியை பாலியல்  பலாத்காரம் செய்த டிரைவர்

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக்காட்டி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சுரேஷ் (24). லாரி ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளாடைவில் காதலாக மாறியது. இதையடுத்து தனிமையில் இருந்த போது அந்த மாணவியுடன் நெருக்கமாக புகைப்படங்களை சுரேஷ் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட சுரேஷ், அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிச் சென்ற மாணவியிடம், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த விஷயங்களை அவரது பெற்றோரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், சுரேஷிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர்களுக்கு சுரேஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சுரேஷ் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவான சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in